search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செருப்பு அணிந்த கர்நாடக முதல்வர்: குமாரசாமி புகாரால் பரபரப்பு
    X

    ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செருப்பு அணிந்த கர்நாடக முதல்வர்: குமாரசாமி புகாரால் பரபரப்பு

    கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ரூ.70 ஆயிரம் விலை கொண்ட செருப்பை அணிந்து உள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா ரூ.70 லட்சம் மதிப்புள்ள வைர கல் பதித்த ஹப்லட் என்ற வகையை சேர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதாக மத சார்பற்ற ஜனதா தள கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதே போல், தற்போது சித்தராமையா, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செருப்புகளை அணிந்துள்ளார் என்ற புதிய குற்றச்சாட்டை குமாரசாமி கூறியுள்ளார்.

    கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வரும் குமாரசாமி தனது பிரசாரத்தின்போது சித்தராமையா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.அதற்போது சித்தராமையா ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செருப்பு அணிந்து இருப்பதாக குமாரசாமி கூறிய இந்த புதிய குற்றச்சாட்டு, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×