search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ரஷிய தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க போகிறீர்களா?’: ராகுல் காந்தியை கிண்டலடித்த ஸ்மிருதி இரானி
    X

    ‘ரஷிய தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க போகிறீர்களா?’: ராகுல் காந்தியை கிண்டலடித்த ஸ்மிருதி இரானி

    “ரஷியா, இந்தோனேசியா, கஜகஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ராகுல் காந்தி திட்டமிடுகிறாரா?” என மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, வெளிநாட்டுக்கு சென்று விட்டு நாடு திரும்பிய பின்னர் சமீப காலமாக டுவிட்டரில் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார். அவரது பதிவுகள், பல்லாயிரக்கணக்கில் மறு டுவிட் செய்யப்படுகிறது.

    சமீபத்தில் “அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மீண்டும் அவசரமாக ஒரு கட்டித்தழுவல் தேவைப்படுகிறது, மோடி அவர்களே” என அவர் பிரதமர் மோடியை கிண்டல் அடித்து வெளியிட்ட பதிவுக்கு 30 ஆயிரம் மறு டுவிட் வந்துள்ளதாம்.

    டுவிட்டர் கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கு ‘டுவிட்டர்பாட்’ என்ற மென்பொருள் வந்துள்ளது. இது தானாகவே டுவிட்டரில் செய்திகளை பதிவிடும், மறு ‘டுவிட்’ செய்யும். ‘லைக்’ செய்யும். பின்தொடரும், உபயோகிப்பாளர்களுக்கு தானாகவே பதில் அளிக்கும். இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளது. இந்த ‘டுவிட்டர்பாட்’ காரணமாகத்தான் ராகுல் காந்தியின் பதிவுகள் ரஷியா, கஜகஸ்தான், இந்தோனேசியா பண்பியல்களோடு தொடர்ந்து மறு டுவிட் செய்யப்பட்டு வருகிறதாம்.

    இதை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

    அதில் அவர், “ஒரு வேளை ரஷியா, இந்தோனேசியா, கஜகஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ராகுல் காந்தி திட்டமிடுகிறாரா?” என கிண்டலடித்துள்ளார்.

    இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×