search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்: 68 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது, பா.ஜ.க.
    X

    இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்: 68 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது, பா.ஜ.க.

    இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 68 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை பா.ஜ.க. தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 68 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை பா.ஜ.க. தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

    68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு நடைபெறும் காங்கிரஸ் அரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    பா.ஜ.க. அங்கு வெற்றிபெற்றால் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக இருமுறை முன்னர் பதவி வகித்த பிரேம் குமார் துமால் அல்லது மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோரை முதல் மந்திரி நாற்காலியில் அமரவைக்க அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளது.

    கடந்த ஒருவாரமாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்து 68 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை இன்று பிற்பகல் வெளியிட்டது.

    தற்போது ஹமிர்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துவரும் முன்னாள் முதல் மந்திடி பிரேம் குமார் துமால் இந்த முறை சுஜன்புர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அம்மாநில பா.ஜ.க. தலைவர் சத்பால் சிங், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்த அனில் சர்மா ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×