search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லல்லுபிரசாத்-முக்கிய தலைவர்கள் பங்கேற்பு: பா.ஜனதாவுக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க. பேரணி
    X

    லல்லுபிரசாத்-முக்கிய தலைவர்கள் பங்கேற்பு: பா.ஜனதாவுக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க. பேரணி

    தமிழ்நாட்டில் ஏற்படும் அரசியல் சூழ்நிலையால் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்த இருக்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்று திரண்டு உள்ளன.

    கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணியை நடத்தி காட்டினார். இதில் 18 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட கூட்டத்தில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர்.


    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து பேரணியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

    இதேபோல் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து தமிழ்நாட்டில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்த இருக்கிறது.

    தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் பிரமாண்ட கூட்டத்தை நடத்துவது சிறப்பாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதால் பிரமாண்ட பேரணியை நடத்துகிறது. லல்லு பிரசாத் யாதவ், மம்தாபானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தி.மு.க. நடத்த இருக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.


    இதேபோல மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தப்படுகிறது. இங்கு மம்தாபானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×