search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம்
    X

    கர்நாடகாவில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம்

    கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வியூகத்தில் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைவரும் இலவசமாக சுகாதாரம் அளிக்கும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு மே மாதம் அந்த ஆட்சியின் பதவி காலம் முடிந்து தேர்தல் வர இருக்கிறது.

    கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வியூகத்தில் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைவரும் இலவசமாக சுகாதாரம் அளிக்கும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

    கர்நாடகா மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இலவச சுகாதார அட்டை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நவம்பர் 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

    ஆதார் நம்பருடன் இந்த சுகாதார அட்டையை இணைத்து இலவசமாக மருத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக ரூ.1.05 கோடி பேருக்கு சுகாதார அட்டையை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், வீடுகளில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் முதல் கட்டமாக வழங்கப்படும்.

    2-வது கட்டமாக 30 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தை கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் மூலம் அரசுக்கு ஆண்டு ரூ.869 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×