search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வுடன் நிதிஷ் குமார் கைகோர்த்தது துரதிர்ஷ்டவசமானது: சரத் யாதவ் அதிருப்தி
    X

    பா.ஜ.க.வுடன் நிதிஷ் குமார் கைகோர்த்தது துரதிர்ஷ்டவசமானது: சரத் யாதவ் அதிருப்தி

    பீகாரில் புதிய அரசு அமைக்க பா.ஜ.க.வுடன் நிதிஷ் குமார் கைகோர்த்தது துரதிர்ஷ்டவசமானது என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் மிகப்பெரும் அரசியல்  திருப்பமாக கடந்த வாரம், ராஷ்டரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    மறுநாளே, பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.

    நிதிஷ் குமார் முதல் மந்திரியாகவும் பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்று கொண்டனர். நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் இதுவரை எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்து வந்தார்.

    இதனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசில் சரத்யாதவுக்கு மந்திரி பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாகவே சரத் யாதவ் அமைதி காப்பதாகவும் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத் யாதவ், நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைத்தற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் வாக்களித்தது இதற்காக அல்ல. மாபெரும் கூட்டணி என்பதை நம்பித்தான் மக்கள் வாக்களித்திருந்தனர். ‘பீகாரில் நடைபெற்றது துரதிருஷ்டவசமானது’ என்று செய்தியாளர்களிடம் சரத் யாதவ் கூறினார்.
    Next Story
    ×