search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
    X

    ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

    ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டு கடந்த மாதம் 3-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடந்து வருகிறது. இதனையடுத்து சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக் கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டது.

    மேற்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெயர்ந்த, இறந்த மற்றும் இருமுறை இடம் பெற்ற வாக்காளர் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 1,82,540 வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக அடையாளம் காணப்பட்டது. அதில் தற்போது வரை மொத்தம் 1,03,896 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

    அதில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. பதவி காலியாக இருப்பதால், எதிர்வரும் இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வாக்குச் சாவடி நிலை அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் மூலம் 49,407 வாக்காளர்களின் பெயர்களை நீக்க அடையாளம் காணப்பட்டது. ஏற்கனவே சில அரசியல் கட்சியினரால் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட பட்டியல்களும் இதில் அடங்கும்.

    எனவே, மீண்டும் 100 சதவீத கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு இடம்பெயர்ந்த 38,319 பேர், இறந்த 3,818 பேர் மற்றும் இருமுறை இடம் பெற்ற 3,682 பேர் என மொத்தம் 45,819 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் வழங்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×