search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் ‘டுவிட்டர்’ கருத்துக்கு கோனார் உரை தேவை: தமிழிசை கிண்டல்
    X

    கமல் ‘டுவிட்டர்’ கருத்துக்கு கோனார் உரை தேவை: தமிழிசை கிண்டல்

    நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் கருத்தை புரிந்துக்கொள்ள கோனார் உரை தேவை என்று பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஓட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பலன் இல்லை என்று புகார் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா இளைஞர் அணியினர் இன்று மாநிலம் முழுவதும் ஓட்டல்களில் நேரில் சென்று கண்காணித்தனர்.

    தியாகராயநகர் பாண்டி பஜாரில் 2 ஓட்டல்களுக்கு பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சென்றார். ஒரு ஓட்டலில் இட்லி, வடையும் மற்றொரு ஓட்டலில் இனிப்பும் சாப்பிட்டார். அந்த பில்களில் ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் மட்டும் வசூலிக்கப்பட்டதை பார்த்து வாழ்த்து கூறினார்.



    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் வேலை பார்க்கும் மக்களில் பலர் ஓட்டலை நம்பியே இருக்கிறார்கள். எனவே உணவுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று 18 சதவீத வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    ஆனால் குஜராத் தேர்தலுக்காக வரியை குறைத்ததாக காங்கிரஸ் கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது.

    பல ஓட்டல்களில் ஜி.எஸ்.டி. வரியை குறைத்து விட்டு உணவு பொருட்களின் விலையை உயர்த்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. உணவு பொருட்கள் விலை குறைய வேண்டுமே தவிர உயருவதற்கான வாய்ப்பே கிடையாது. ‘நான் பிராண்டட்’ அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரியே கிடையாது. அப்படி இருக்கும்போது உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு கிடையாது. முன்பே உணவு பண்டங்கள் விலையை குறைத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இனியாவது குறைக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு பாக்கெட்டுகளில் சப்ளை செய்யப்படும் பொருட்களுக்கு முந்தைய விலையை மறைக்காமல் குறைக்கப்பட்ட விலையை அருகில் ஒட்ட வேண்டும் என்பதுதான் அரசு உத்தரவு.

    ஓட்டல்களிலும் ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் பழைய விலையையும், இப்போதைய விலையையும் எழுதி வைக்க வேண்டும்.

    முறையாக இருந்தால் பாராட்டுவோம். இல்லா விட்டால் கோரிக்கை வைப்போம். அதிலும் சீராகவில்லை என்றால் புகார் செய்து நடவடிக்கைக்கு உள்ளாக்குவோம்.

    நடிகர் கமல் டுவிட்டர் வலைதளத்தில் அடிக்கடி தனது கருத்துக்களை பதிவிடுகிறார். அதை புரிந்து கொள்ளவே கோனார் தமிழ் உரை தேவைப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ், கோட்ட பொறுப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×