search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்
    X

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்துவருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: -

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும்.

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை பெய்யவேண்டிய சராசரி மழை 277 மி.மீ. ஆனால் இந்த வருடம் பெய்த மழை 371 மி.மீ.ஆகும். அதாவது கூடுதலாக 34 சதவீத மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கூடலூர் பஜாரில் 8 செ.மீ. மழையும், நடுவட்டத்தில் 4 செ.மீ. மழையும், பூதப்பாண்டி, சின்னக்கல்லாறு தலா 2 செ.மீ. மழையும், பேச்சிப்பாறை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டம் பாபநாசம், நாகர்கோவில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது. 
    Next Story
    ×