search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு, ஏற்கெனவே கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு:

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.

    தக்காளி விலை கடந்த சில வாரங்களாக கோயம்பேட்டில் கிலோ ரூ. 10-க்கு விற்கப்பட்டது. சென்னையில் இதர பகுதிகளில் தக்காளி விலை கிலோ ரூ. 15-க்கு விற்கப்பட்டு வந்தது.

    ஆனால் இந்த வாரத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பலத்த மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலேயே காய்கறிகள் வருகின்றன.

    வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 350 லாரிகளில் காய்கறி கொண்டு வரப்படும். ஆனால் தற்போது தினமும் 200 முதல் 250 லாரிகளே வருகின்றன. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது.

    ஏற்கெனவே கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை கடைகளில் தக்காளி கிலோ ரூ. 60 வரை விற்கப்படுகிறது.

    இதற்கு முன்பு ரூ. 15-க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ 30-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் ரூ. 90-க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் ரூ. 100 ஆகவும். ரூ. 20-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ. 30 ஆகவும், ரூ. 25-க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ. 30 ஆகவும் உயர்ந்துள்ளது.

    ரூ. 30-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ. 70 ஆகவும், ரூ 30-க்கு விற்கப்பட்ட பீன்ஸ், ரூ. 70 ஆகவும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ. 40 ஆகவும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ. 40 ஆகவும் விற்கப்படுகிறது. அதாவது சில காய்கறிகளின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.

    Next Story
    ×