search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தினமும் கடைபிடிக்கக்கூடிய எளிய ஆரோக்கிய உணவுமுறை
    X

    தினமும் கடைபிடிக்கக்கூடிய எளிய ஆரோக்கிய உணவுமுறை

    உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எல்லா சத்துக்களும் தேவையான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது அன்றாட சாப்பாடு அமைய வேண்டும்.
    உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும் இதில் உணவுக்குச் சிறப்பிடம் உண்டு. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.

    வீட்டில் தயாரித்த உணவே சிறந்தது. அதுவும் சமைத்த இரண்டு மணி நேரத்துக்குள் உண்பது நல்லது.

    காலை உணவைத் தவறாமல் உண்ண வேண்டும்.

    குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதை வாழ்க்கை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

    உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும்.



    ஜங்க்ஃபுட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    பழம், சிறுதானியம், வறுத்த கடலை போன்ற வற்றைத் தினசரி சேர்த்துக்கொள்வது நல்லது.

    இரண்டு வேளைக்கு மேல் காபி, டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கோடையில் நுங்கு, இளநீர், பழரசம் அருந்தலாம்.

    தயிருக்குப் பதிலாக மோர், உருக்கிய நெய் பயன்படுத்துவதால் வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.

    டயட்டீஷியனின் ஆலோசனையின்பேரில் கார்போஹைட்ரேட், மினரல், வைட்டமின், கால்சியம், புரோட்டீன் போன்றவை அடங்கிய உணவை உண்ணலாம்.
    Next Story
    ×