search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரியங்கா காந்தி ஒரு தொகுதிக்குள் சுருங்கிவிடக் கூடாது- ஜெய்ராம் ரமேஷ்
    X

    பிரியங்கா காந்தி ஒரு தொகுதிக்குள் சுருங்கிவிடக் கூடாது- ஜெய்ராம் ரமேஷ்

    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.
    • அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த இரு தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்தது. அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியானதால் இந்த இரு தொகுதி வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.

    அதில், ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேசத்தின் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது:-

    பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை தனது தீவிரமான பரப்புரையின்மூலம் ஒற்றை ஆளாக தவிடுபொடியாக்கி வருகிறார் பிரியங்கா காந்தி.

    காங்கிரஸ் கட்சிக்காக அவர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் பிரியங்கா காந்தி சுருங்கிவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×