search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அவர்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.. ஆந்திராவில் நாங்க தான்- அமித் ஷா
    X

    அவர்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.. ஆந்திராவில் நாங்க தான்- அமித் ஷா

    • ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடிக்கு ஆதரவு.

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. அந்த வகையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் மே 13 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதே நாளில் அம்மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது.

    ஆந்திராவில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சுற்று பயணத்தின் அங்கமாக அம்மாநிலத்தின் தர்மவரம் பகுதியில் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதுவே ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருப்பதை எடுத்துரைக்கிறது."

    "இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெறப்போகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது..," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×