search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரசேகர ராவ் 2 நாட்கள் பிரசாரம் செய்யத் தடை- தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
    X

    சந்திரசேகர ராவ் 2 நாட்கள் பிரசாரம் செய்யத் தடை- தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

    • காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரசேகர ராவ் இழிவாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்தார்
    • சந்திரசேகர ராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.

    இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரசேகர ராவ் இழிவாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்தார்.

    இந்த புகார் தொடர்பாக சந்திரசேகர ராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த புகாரின் விசாரணையில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் காங்கிரஸ் தொண்டர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்தது.

    இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் இந்த தற்காலிக தடை அமலுக்கு வருகிறது.

    இந்த 48 மணி நேர தடையில் பொதுக் கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், பொது பேரணிகள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்கள், ஊடகங்களில் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) பகிரங்கமாக பேச கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் 324 வது பிரிவை மேற்கோள் காட்டி இந்த தடையை விதித்துள்ளது.

    Next Story
    ×