search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் அலாஸ்கா கடலோரப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
    X

    அமெரிக்காவின் அலாஸ்கா கடலோரப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

    கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Alaska #earthquake
    நியூயார்க்:

    வடஅமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் சினியக் நகரின் தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 4.31 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3 மணி) பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுக்கோலின்படி 8.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி முழுவதற்கும் சுனாமி கண்காணிப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. #Tamilnews
    Next Story
    ×