search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை மீண்டும் தடுக்க சீனா முடிவு
    X

    மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை மீண்டும் தடுக்க சீனா முடிவு

    ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தடுக்க சீனா முடிவெடுத்துள்ளது.
    பீஜிங்:

    பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவன் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.  இவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா கடும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் கடந்தாண்டு மார்ச்சில் தீர்மானம் கொண்டு வந்தது.



    பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவான். இதன் மூலம், அவனுடைய சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். அவன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

    ஆனால், சீனா மட்டும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தது. இந்தாண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்டிலும் மீண்டும் இந்த தீர்மானம் பரிசீலிக்கப்பட்ட போதும் சீனா முட்டுக்கட்டை போட்டது. கடந்த ஆகஸ்டில் தீர்மானம் வந்தபோது, சீனா 3 மாதங்கள் அவகாசம் கேட்டது. அந்த கெடு விரைவில் முடிகிறது. இந்நிலையில், இந்த தீர்மானத்தை மீண்டும் தடுக்க சீனா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவ சங்க்யிங் நேற்று மறைமுகமாக தெரிவித்தார். 
    Next Story
    ×