search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு எதிராக பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் கருத்து?
    X

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு எதிராக பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் கருத்து?

    2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது மிகவும் தவறான நடவடிக்கை என்பது போல பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் டுவிட் செய்துள்ளார்.

    நியூயார்க்: 

    இந்தியாவில் கடந்து ஆண்டு நவம்பரில் திடிரென்று 500, 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. டிமானிடைசேஷன் எனப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை இரவோடு இரவாக அமல்படுத்தப்பட்டது. இந்த பணமதிப்பிழப்பு பலரது பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. நிறைய தொழில் நிறுவனங்கள் கடன்பட்டு திவாலாகும் நிலைக்குச் சென்றன. பெரிய வர்த்தக நிறுவனங்கள் தொடங்கி, சிறு தொழில் நிறுவனங்கள் வரை இந்த எதிர்பாராத நடவடிக்கையால் ஸ்தம்பித்து நின்றன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நிறைய பொருளாதார ஆய்வாளர்கள் மோசமான கருத்துக்களை கூற ஆரம்பித்தனர். 

    சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இவர் சென்ற ஆண்டு இந்தியாவில் டிமானிடைசேஷன் செய்யப்பட போது அதுகுறித்து கருத்து தெரிவித்தார். அதன்படி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டிமானிடைசேஷன் மிகவும் சிறந்த நடவடிக்கை ஆகும். உயர்ந்த மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இல்லாதது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும். மேலும் இந்த நடவடிக்கை ரொக்கமில்லாத பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தார்.



    இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தாலருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது. ரிச்சர்ட்டின் இந்த கருத்துக்கு பதிலாக ஒருவர் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த பதிலை பார்த்து ரிச்சர்ட் தாலர் உடனே அதிர்ச்சி அடைந்தார். 



    மேலும் அதற்கு முன்பு டிமானிடைசேஷன் குறித்து அவர் கூறிய கருத்தை திரும்பப் பெறும் வரும் வகையில் " ஐயோ '' என்பது போல கருத்து ஒன்றை தெரிவித்தார். இதன் மூலம் அவர் 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.



    இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணரான, முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனும், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த சின்ஹாவும்  பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×