search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா: விர்ஜினியா மாகாணத்தில் இரு தரப்பினரிடையே மோதலில் 3 பேர் பலி - அவரசநிலை பிரகடனம்
    X

    அமெரிக்கா: விர்ஜினியா மாகாணத்தில் இரு தரப்பினரிடையே மோதலில் 3 பேர் பலி - அவரசநிலை பிரகடனம்

    அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் இரு தரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியானதை தொடர்ந்து அங்கு அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் இரு தரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதை தொடர்ந்து அங்கு அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 1861-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்பு படையை ராபர்ட் இ லீ என்பவர் வழிநடத்திச் சென்றார். இவரது சிலை சார்லொட்டஸ்வில்லி நகரில் உள்ள பூங்காவில் இருந்தது. தற்போது, அவரது சிலை அகற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

    இதனைக் கண்டித்து அந்நகரில் ஆயிரக்கணக்கான தீவிர வலதுசாரி வெள்ளை இனத்தவர்கள் நேற்று பேரணி நடத்தினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் பேரணி நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.



    மோதல் கலவரமாக மாறிய சூழ்நிலையில், கூட்டத்தில் ஒரு கார் ஒன்று வேகமாக மோதியது. இதில், 35 வயது மிக்க பெண்மணி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 13-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

    நிலைமை மிக மோசமாக சென்றதால் அம்மாநில கவர்னர் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார். மேலும் பிரச்சனை தீவிரமாகாமல் தடுப்பதற்காக அந்நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், இன துவேஷங்களை புறம் தள்ளி அனைவரும் அமெரிக்கர்களாக ஒன்றினைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×