search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘மதுவில் உள்ள ஆல்கஹால் நினைவாற்றலை அதிகரிக்கும்’: ஆய்வில் தகவல்
    X

    ‘மதுவில் உள்ள ஆல்கஹால் நினைவாற்றலை அதிகரிக்கும்’: ஆய்வில் தகவல்

    மதுவை விரும்பி ஆர்வத்துடன் அதிக அளவு குடித்தவர்களை விட சிறிதளவு மது குடித்தவர்களுக்கு நினைவாற்றல் சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    லண்டன்:

    மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பன போன்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    ஆனால் மதுவில் உள்ள ஆல்கஹால் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள எஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 88 பேரிடம் இது குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்களே விரும்பி ஆர்வத்துடன் அதிக அளவு மது குடிப்பவர்கள் என்றும், ஏனோதானோவென்று சிறிதளவு மது குடிப்பவர்கள் என்றும் 2 ரகமாக பிரித்தனர்.

    அவர்களில் விரும்பி ஆர்வத்துடன் அதிக அளவு மது குடித்தவர்களை விட சிறிதளவு மது குடித்தவர்களுக்கு நினைவாற்றல் சக்தி அதிகரித்து இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அதிக அளவு மது குடித்தவர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
    Next Story
    ×