search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை மோதி தாக்குதல்
    X

    பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை மோதி தாக்குதல்

    ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை வேகமாக மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் அதிபராக மைக்கேல் டெமர் பதவி வகித்து வருகிறார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    தலைநகர் பிரேசிலியாவில் அதிபர் மாளிகை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாளிகையின் முன் பக்க மெயின் ‘கேட்’ மீது கார் மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.

    வேகமாக வந்த அந்த கார் அதிபர் மாளிகையின் கேட் மீது அதி பயங்கரமாக மோதியது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி காரை நிறுத்தினார்கள்.

    அதன் பின்னர் காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். இத்தாக்குதல் நடந்த போது அதிபர் மைக்கேல் டெமர் மாளிகையில் இல்லை. இவருக்கு முன்பு அதிபராக இருந்து டில்மாரூசெப்பும் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
    Next Story
    ×