search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை புரட்டி போட்ட கனமழை - 150 பேர் பலி
    X

    15 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை புரட்டி போட்ட கனமழை - 150 பேர் பலி

    இலங்கையில் தற்போது கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு 2003-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டையை புரட்டி போட்டுள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 150-ஐ கிட்டத்தட்ட எட்டியுள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.  

    15 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 124 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சத்து 42 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புக் குழு கூறியுள்ளது.

    24 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் 319-க்கும் மேற்பட்ட பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



    இலங்கையின் முப்படை வீரர்கள் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, இலங்கைக்கு உதவி செய்யும் விதமாக இந்தியா மூன்று கப்பல்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை நேற்று அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×