search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திடீர் மாரடைப்பு: பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் தாவூத்இப்ராகிம் கவலைக்கிடம்?
    X

    திடீர் மாரடைப்பு: பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் தாவூத்இப்ராகிம் கவலைக்கிடம்?

    மும்பை தொடர் குண்டுவெடிப்பில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத்இப்ராகிம் திடீர் மாரடைப்பால் பாகிஸ்தானில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
    கராச்சி:

    பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் தாவூத் இப்ராகிம் கவலைக்கிடமாக சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பையை சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 250 பேர் உயிரிழந்தனர். அதில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி தலைமறைவானார். எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது.

    தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். அவரை ஒப்படைக்கும்படி பலமுறை இந்தியா கேட்ட போது, அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் மறுத்துவருகிறது.

    இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், கராச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது. அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அது உண்மையல்ல பரப்பப்பட்ட வதந்தி ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. இறுதியாக தாவூத் இப்ராகிம் கடந்த 2001-ம் ஆண்டு பொது இடத்தில் தோன்றினார். பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து வெளியாகும் நியூஸ்லைன் பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருந்தார்.
    Next Story
    ×