search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டி அருகே கார் குளத்தில் பாய்ந்தது: சென்னை பக்தர்கள் உயிர் தப்பினர்
    X

    திருத்துறைப்பூண்டி அருகே கார் குளத்தில் பாய்ந்தது: சென்னை பக்தர்கள் உயிர் தப்பினர்

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விபத்தில் சிக்கியது திருக்கொள்ளிக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த திருக்கொள்ளிக் காட்டில் பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிப் பெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    சென்னை திருவொற்றி யூரைச் சேரந்த சுந்தர் (வயது 53) என்பவர் தனது காரில் நேற்று திருக்கொள்ளிக்காடு வந்தார். அவருடன் ரமேஷ் (47) ராமநாதன் (53) இன்னொரு ரமேஷ் (50) ஆகியோரும் வந்தனர். காரை சுந்தர் ஓட்டி வந்தார்.

    அந்த கார் திருக்கொள்ளிக்காடு அருகே உள்ள வன்னியடிக்கோமல் என்ற இடத்தில் வந்த போது நிலை தடுமாறி அப்பகுதியில் உள்ள குளத்தில் பாய்ந்தது. அதில் 15 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால் கார் மூழ்கியது. இதனை கண்ட பொதுமக்கள் குளத்தில் குதித்து கார் கண்ணாடிகளை உடைத்து காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டனர். பின்னர் காரையும் பொதுமக்கள் தூக்கி வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் காரில் வந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

    இந்த விபத்து குறித்து ஆலிவலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் மகாலட்சமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விபத்தில் சிக்கியது திருக்கொள்ளிக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×