search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் தற்கொலை
    X

    கோத்தகிரியில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் தற்கொலை

    கோத்தகிரியில் இன்று காலை தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோத்தகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேணு பகுதியை சேர்ந்தவர் பெல்லிராஜ் (வயது 80). இவர் சொந்தமாக மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார்.

    இவருக்கு தேயிலை தொழிற்சாலை, திருமண மண்டபம், டீ எஸ்டேட் போன்றவையும் உள்ளது. கோவையில் ஸ்பின்னிங் மில் வைத்துள்ளார்.

    இன்று அதிகாலையில் எழுந்த பெல்லி ராஜ் வாக்கிங் சென்று விட்டு காலை 7.30 மணியளவில் தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது தனது அறைக்குள் சென்ற பெல்லி ராஜ் தனது பாதுகாப்புக்காக லைசென்ஸ் வாங்கி வைத்திருந்த ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தெரியவந்ததும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த தொழில் அதிபர் பெல்லிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அவர் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கோத்தகிரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் பெல்லிராஜூக்கு லட்சுமி என்ற மனைவியும், பிரேமா, சித்ரா, ஹேமா என்ற 3 மகள்களும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.

    தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோத்தகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×