search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் எத்தனை சட்ட விரோத கட்டிடங்கள் உள்ளன?: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்டு
    X

    கொடைக்கானலில் எத்தனை சட்ட விரோத கட்டிடங்கள் உள்ளன?: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்டு

    கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்து நவம்பர் 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொடைக்கானல் நகராட்சி ஆணையர் மற்றும் நகர ஊரமைப்பு இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கொடைக்கானலை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொடைக்கானல், சண்முகபுரம் பகுதியில் வீடு கட்டி வருகிறேன்.

    ஆனால், கட்டுமானப் பணி அனுமதியின்றி மேற்கொண்டதாக கூறி, கொடைக்கானல் நகராட்சி ஆணையர் கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்து உத்தரவிட்டார். மேலும் முன் அறிவிப்பு எதுவும் இன்றி, கட்டிடத்தின் திட்ட உரிமத்தையும் ரத்து செய்தார். இதை எதிர்த்து நகராட்சி நிர்வாகத்துறை செயலாளரிடம் மேல் முறையீடு செய்துள்ளேன்.

    இந்த நிலையில், கட்டிடத்தை இடிப்பதற்கு நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு தடை விதிக்கவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் விசாரித்து, மனுதாரர் அனுப்பியுள்ள சீராய்வு மனுவை 10 வாரங்களுக்குள் நகராட்சித்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும். அதுவரை கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை கொடைக்கானல் நகராட்சி ஆணையர் மேற்கொள்ளக்கூடாது.

    கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் ஏராளமான சட்ட விரோத கட்டிடங்கள் கட்டப்படுவதாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    எனவே, கொடைக்கானலில் எத்தனை சட்ட விரோத கட்டிடங்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து, கொடைக்கானல் நகராட்சி ஆணையர் வருகிற நவம்பர் 10-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×