search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ஓட்டலில் உடற்பயிற்சிக்கு இடம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் தவிப்பு
    X

    புதிய ஓட்டலில் உடற்பயிற்சிக்கு இடம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் தவிப்பு

    வின்ட்பிளவர் ஓட்டலில் தங்கி இருந்தபோது உடற்பயிற்சி செய்த பல எம்.எல்.ஏ.க்கள் புதிய ஓட்டலுக்கு வந்ததற்கு பிறகு உடற்பயிற்சியை கைவிட்டு ஓட்டல் அறைகளிலேயே அவர்கள் முடங்கி கிடக்கிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதலில் சின்னவீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு ரிசார்ட் ஓட்டலில் தங்கினார்கள். அந்த ஓட்டல் கடற்கரை ஓரமாக விசாலமான இடத்தில் அமைந்திருந்தது.

    இதனால் அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் கடற்கரையில் வாக்கிங் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டனர். மேலும் உள் வளாகத்திலும் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் பல்வேறு வசதிகள் இருந்தன. பொழுது போக்குக்கு உலாவுவதற்கும் ஓட்டலில் சிறப்பான வசதி இருந்தது.

    ஆனால் புதிதாக தங்கியுள்ள ஓட்டலில் இதுபோன்ற வசதிகள் இல்லை. அங்கு ஜிம் உடற்பயிற்சி கூடம் மட்டும் உள்ளது. வேறு வசதிகள் இல்லை. வாக்கிங் செல்வதற்கும் போதுமான இடவசதி இல்லை.

    இதனால் எம்.எல்.ஏ.க்கள் மிகவும் அவதியடைந்தார்கள். சிறிய வளாகத்தையே சுற்றிச்சுற்றி வாக்கிங் வந்தனர். கதிர்காமு எம்.எல்.ஏ. ஓட்டலில் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி உடற்பயிற்சி செய்தார்.

    வின்ட்பிளவர் ஓட்டலில் தங்கி இருந்த போது உடற்பயிற்சி செய்த பல எம்.எல்.ஏ.க்கள் இந்த ஓட்டலுக்கு வந்ததற்கு பிறகு உடற்பயிற்சியையே கைவிட்டு விட்டனர். ஓட்டல் அறைகளிலேயே அவர்கள் முடங்கி கிடந்தார்கள்.

    Next Story
    ×