search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட போலி டாக்டர் அப்துல் ரசாக்.
    X
    கைது செய்யப்பட்ட போலி டாக்டர் அப்துல் ரசாக்.

    பல்லடத்தில் போலி டாக்டர் கைது

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 1 மாதங்களாக பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மந்திரி பாளையத்தில் தனியார் கிளினிக் செயல்பட்டு வந்தது. இங்கு அப்துல் ரசாக் என்பவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அவர் கடந்த 1 மாதங்களாக பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து திருப்பூர் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர். சவுந்திரராஜன் தலைமையில் அதிகாரிகள் கிளினிக் வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவினாசி அருகே உள்ள கை காட்டியை சேர்ந்த போலி டாக்டர் அப்துல் ரசாக் (57) என்பவர் பிஸ்மி கிளினிக் என்ற பெயரில் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து போலி டாக்டர் அப்துல் ரசாக்கை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×