search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்தல் விவகாரம்: முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    மணல் கடத்தல் விவகாரம்: முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    பாலாற்று மணல் கடத்தலை தடுக்க தவறியதாக கூறி வாட்ஸ்அப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது31). இவர் எம்.எஸ்.சி. வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இவர் வாலாஜா வி.சி. மோட்டூர் ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மணல் கடத்தப்பட்டு வருவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாய பாசனத்துக்கு நீரின்றி விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பதாக குறிப்பிட்டு, மணல் கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகங்களுக்கு விக்னேஷ் அடிக்கடி புகார் மனு அனுப்பி வந்துள்ளார்.

    இந்நிலையில் விக்னேஷ் அனுப்பிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆவேசமடைந்த அவர் பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்காததால், வேலூர் மாவட்டத்தில் விவசாயம் பாழடைந்து விட்டதாகவும், மணல் கடத்தலால் விவசாயம், வேலூர் மாவட்டத்தில் அழிந்து விட்டதாகக் கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர் ராமன், எஸ்.பி. பகலவன் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்து தான் பேசிய வீடியோ பதிவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து வி.ஏ.ஓ. சம்பந்தம் வாலாஜா போலீசில் புகார் செய்தார். போலீசார் விக்னேஷ் மீது 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் பழனிசாமி குறித்து ‘வாட்ஸ் அப்’பில் அவதூறு செய்தி ஒன்று கடந்த சில நாட்களாக பரவி வந்தது. இது குறித்து சேலம் மாவட்ட ‘சைபர் க்ரைம்’ போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவதூறு செய்தியை வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் சேலத்தில் உள்ளவருக்கு அனுப்பியது தெரிய வந்தது.

    இதையடுத்து சேலம் போலீசார் வேலூர் விருப்பாட்சிபுரத்துக்கு நேற்று வந்தனர். சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அந்த செய்தியை அனுப்பியதும், வேறு ஒருவர் ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியதை அவர் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சேலம் போலீசார் ‘இனிமேல் இதுபோன்ற உண்மை அல்லாத மற்றும் அவதூறு செய்திகளை பிறருக்கு அனுப்பும் செயல்களில் ஈடுபடக்கூடாது’ என்று அவரை எச்சரித்து விட்டு சென்றனர்.
    Next Story
    ×