search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை சுதந்திர தின விழா: உப்பளம் மைதானத்தில் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்
    X

    நாளை சுதந்திர தின விழா: உப்பளம் மைதானத்தில் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்

    நாடு முழுவதும் நாளை 70-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி உப்பளம் மைதானத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் நாளை 70-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. அது போல்புதுவை அரசு சார்பில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நாளை நடக்கிறது.

    விழாவையொட்டி கொடிமேடை அமைக்கப்பட்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை 8.55 மணிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உப்பளம் மைதானத்துக்கு வருகிறார். அவரை தலைமை செயலாளர் மனோஜ்பரிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து செல்கிறார்.



    கொடி மேடைக்கு செல்லும் நாராயணசாமி அங்கு தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். மீண்டும் மேடை திரும்பும் நாராயணசாமி சுதந்திர தின உரையாற்றுகிறார்.

    இதைத்தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த போலீசார் வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருது, பதக்கம் ஆகியவற்றை வழங்குகிறார். மேலும் சிறந்த தேர்ச்சி வீதம் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சிறப்பாக சேவை புரிந்த செவிலியர்கள் ஆகியோருக்கும் விருதுகளை வழங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவுகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., தீயணைப்பு, முன்னாள் ராணுவ வீரர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடக் கிறது. இந்த அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொள்கிறார்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்கள், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி உப்பளம் மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

    விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. உப்பளம் மைதான விழாவை தொடர்ந்து சட்டமன்ற வளாகத்திற்கு நாராயணசாமி வருகிறார். அங்குள்ள கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×