search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே கடலில் குளித்த சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி: ஒருவர் உடல் மீட்பு
    X

    புதுவை அருகே கடலில் குளித்த சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி: ஒருவர் உடல் மீட்பு

    புதுவை அருகே கடலில் குளிக்க சென்ற 3 சுற்றுலா பயணிகள் கடல் அலையில் சிக்கி பலியாயினர். இதையடுத்து பலியான 2 வாலிபர்களின் உடல்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
    சேதராப்பட்டு:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த அசோக்குமார் (வயது20), பீரதீப்குமார்(25), ரகு (22) உள்பட 9 வாலிபர்கள் ஒரு காரில் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். புதுவையில் ஓட்டல்களில் அறை கிடைக்காததால் அவர்கள் புதுவையை அடுத்த பெரியமுதலியார்சாவடியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கி புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு 9 பேரும் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். இதில் அசோக்குமாரும், பிரதீப்குமாரும் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது எழும்பி வந்த ஒரு ராட்சத அலை அவர்கள் 2 பேரையும் சுருட்டி வாரிச்சென்றது. இதனை பார்த்ததும் அருகில் குளித்து கொண்டு இருந்த ரகு அவர்களை மீட்க முயன்றார். இதில் ரகுவையும் கடல் அலை இழுத்து சென்றது.

    இதனால் அவர்களது நண்பர்கள் 6 பேரும் அதிர்சிக்குள்ளானார்கள். கரை திரும்பிய அவர்கள் இதுபற்றி அருகில் இருந்த மீனவர்களிடம் கூறி நண்பர்களை காப்பாற்றி மீட்டு தரும்படி முறையிட்டனர். உடனே மீனவர்கள் படகில் சென்று கடல் அலையில் இழுத்து சென்ற 3 பேரையும் தேடினார்கள். ஆனால் காப்பாற்ற சென்ற ரகுவை பிணமாகதான் மீட்க முடிந்தது. மற்ற 2 பேரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் கருதப்படுகிறது.

    இதையடுத்து தகவல் அறிந்த ஆரோவில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரும், மீனவர்களும் தொடர்ந்து கடல்அலையில் இழுத்து சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.அதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் மீட்கும் நடவடிக்கையை கைவிட்டனர்.

    இன்று காலை கடலோர காவல் படையினருடன் போலீசாரும், மீனவர்களும் இணைந்து தொடர்ந்து இருவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×