search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராவை நோக்கி கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணி 129 ரன்கள் முன்னிலை
    X

    டிராவை நோக்கி கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணி 129 ரன்கள் முன்னிலை

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா-இலங்கை அணிகளின் முதல் டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்றுள்ளது.
    கொல்கத்தா:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. 32.5 ஓவர்கள் மட்டுமே இரண்டு நாளில் வீசப்பட்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ஹெராத் 67 ரன்னும், மேத்யூஸ் 52 ரன்னும், திரிமானே 51 ரன்னும் எடுத்தனர். முகமது‌ஷமி, புவனேஷ்வர்குமார் தலா 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. ராகுல், தவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து இருந்தது.

    தவான் 94 ரன் எடுத்த நிலையில் ‘அவுட்’ ஆனார். ராகுல் 73 ரன்னுடனும், புஜாரா 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 49 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.

    ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ‘அவுட்’ ஆனார். அவர் 79 ரன்னில் லக்மல் பந்தில் போல்டு ஆனார். 125 பந்தில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 192 ஆக இருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். 47.4-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்னை தொட்டது.

    புஜாரா 22 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் ‘அவுட்’ ஆனார். அடுத்து வந்த ரகானே கோல்டன் டக் மூலம் வெளியேறினார்.

    5-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட்கோலியுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடினார். 41 பந்து சந்தித்த ஜடேஜா 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    கேப்டன் விராட் கோலி 41 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி 129 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.

    இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த டெஸ்ட் டிராவில் முடிவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
    Next Story
    ×