search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல் பந்து வீச்சில் ஈடுபட்டு விக்கெட் வீழ்த்த வேண்டும் என கோலி விரும்புவார்: சாஹல்
    X

    தாக்குதல் பந்து வீச்சில் ஈடுபட்டு விக்கெட் வீழ்த்த வேண்டும் என கோலி விரும்புவார்: சாஹல்

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, எப்போதும் பந்து வீச்சாளர் அட்டக்காக பந்து வீசி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று விரும்புவார் என சாஹல் கூறியுள்ளார்.
    இந்திய அணி சமீபத்தில் இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த தொடரின்போது நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. சாஹல், அக்சார் பட்டேர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.

    மூன்று பேரும் அபாரமான பந்து வீச்சுகளை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக லெக்ஸ்பின்னர் ஆன சாஹல் அபாரமாக பந்து வீசினார். விராட் கோலி எந்த இக்கட்டான நேரத்திலும் பந்து வீச அழைத்தாலும் தயங்குவதில்லை. விராட் கோலியின் நம்பிக்கையை வீணடிக்காமல பந்து வீச்சில் அசத்துகிறார். இதனால் வீராட் கோலி விரும்பும் பந்து வீச்சாளராக சாஹல் உள்ளார்.

    விராட் கோலி எப்போதும் அட்டாக்காக பந்து வீசி விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்புவார் என சாஹல் கூறியுள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘விராட் கோலி எப்போதும் என்னிடம் கூறுவது, ரன்கள் அதிக அளவில் விட்டுக்கொடுத்தாலும், மிடில் ஓவர்களில் ஒன்றிரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் கவலையடைய மாட்டேன் என்பதுதான். டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில், நான்கு ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து, இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்திவிட்டால், கோலி மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

    எனினும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், 2-வது ஓவரை வீசும்போது, அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதுதான் திட்டம். ஏனெனில் நான் அட்டக்காக பந்து வீச நினைத்தால், பந்தை பிளைட்-ஆக வீச வேண்டும். இதில் விக்கெட் கிடைக்கும் அல்லது சிக்ஸ் பறக்கும். அந்த நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் இந்த திட்டம்’’ என்றார்.
    Next Story
    ×