search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாட்ரிக் விக்கெட் எடுக்க டோனி உதவினார்: குல்தீப் யாதவ்
    X

    ஹாட்ரிக் விக்கெட் எடுக்க டோனி உதவினார்: குல்தீப் யாதவ்

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதற்கு டோனி உதவினார் என இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். அவர், மேத்யூ வாடே, ஆஷ்டன் ஆசர், கம்மின்ஸ் ஆகியோரை தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஆவார்.

    இதற்கு முன்பு சேத்தன்சர்மா நியூசிலாந்துக்கு எதிராகவும் (1987, நாக்பூர்), கபில்தேவ் இலங்கைக்கு எதிராகவும் (1991, கொல்கத்தா) ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    இந்நிலையில், ‘ஹாட்ரிக்’ விக்கெட் குறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், 'ஹாட்ரிக் பந்தை எப்படி வீச வேண்டும் என்று டோனியிடம் ஆலோசனை கேட்டேன். அதற்கு அவர், உனக்கு எப்படி வீச வேண்டுமோ அப்படி வீசு என்றார். இது எனக்கு சிறப்பு வாய்ந்ததாகும். அது ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. இது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான தருணம்', என்றார்.


    Next Story
    ×