search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடம்
    X

    ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடம்

    ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். டேவிட் வார்னர் 2-ம் இடத்தில் உள்ளார்.


    துபாய்:

    ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். டேவிட் வார்னர் 2-ம் இடத்தில் உள்ளார்.

    டாப் 15 இடங்களில் தோனி (12), தவண் (13), ரோஹித் சர்மா (14) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சுத் தரவரிசையில் இந்திய வீரர் ஒருவர் கூட டாப் 10-ல் இல்லை, புவனேஷ் குமார்தான் அதிகபட்சமாக 13-ம் இடத்தில் உள்ளார்.

    ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் இந்தியா தற்போது 3-ம் இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிராக தம்புல்லாவில் ஞாயிறன்று தொடங்கும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 4-1 என்று தொடரை வென்றால் இதே 3-ம் இடத்தைத் தக்க வைக்க முடியும்.

    114 புள்ளிகளில் இருக்கும் இந்தியா, 3-2 என்று இலங்கையை வீழ்த்தினால் கூட தசமப்புள்ளிகளில் இங்கிலாந்தை விட குறைவாகப் பெற்று பின்னடைவு கண்டு விடும். இலங்கை நேரடியாக 2019 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்ய இந்தத் தொடர் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கை அணி குறைந்தது 2 போட்டிகளையாவது வெல்வது அவசியம். அப்போதுதான் இலங்கை தகுதி பெறுவதை உறுதி செய்துகொள்ள முடியும்.

    உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற இறுதிக்கெடு செப்டம்பர் 30-ம் தேதி. இலங்கை அணி 88 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது. 9-வது இடத்திலிருக்கும் மே.இ.தீவுகளை விட இலங்கை 10 புள்ளிகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது.

    ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கடைசி 4 இடங்களில் உள்ள அணிகள் தகுதிப் போட்டிகளில் ஆட வேண்டும். இப்போட்டிகளில் முதல் 2 இடங்களில் வரும் அணி 2019 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும்.
    Next Story
    ×