search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை கிரிக்கெட் அணி நேரடியாக தகுதிபெறுவதில் சிக்கல்
    X

    2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை கிரிக்கெட் அணி நேரடியாக தகுதிபெறுவதில் சிக்கல்

    2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதில் இலங்கை அணிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


    கொழும்பு: 

    2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதில் இலங்கை அணிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2019-ம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

    எஞ்சியுள்ள 9 இடங்களில், வரும் செப்டம்பர் மாதத்தில் ஒருநாள் தரவரிசையில், இங்கிலாந்தை (தற்போது 4வது இடம்) தவிர்த்து ‘டாப்-7’ இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெறும். மீதமுள்ள 2 இடங்களுக்கு, வரும் 2018 மார்ச் 1 முதல் ஏப்ரல் 4 வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ள உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றி பெறும் 2 அணிகள் தகுதி பெறும்.

    இதன்படி தற்போது, இலங்கை அணி ஒருநாள் தரவரிசையில் 88 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. இதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணி 78 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

    இதனால், இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி கட்டாயமாக 2 போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி தவறும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த இடைப்பட்ட நாட்களில் அயர்லாந்து (1 போட்டி ) இங்கிலாந்து (5 போட்டி) அணிக்கு எதிராக மொத்தமாக 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

    இந்த அனைத்து போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிப்பெறும். இலங்கை தகுதிச்சுற்று மூலம் வரும் நிலை ஏற்படும். மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணி 1 போட்டியில் தோற்றால் கூட இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டியில் தோற்றாலும் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.
    Next Story
    ×