search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ‘ஒயிட் வாஷ்’ செய்தது இந்திய கிரிக்கெட் அணி
    X

    19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ‘ஒயிட் வாஷ்’ செய்தது இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா - இங்கிலாந்து இடையேயான 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    லண்டன்:

    இந்தியா - இங்கிலாந்து இடையேயான 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டில் இரண்டு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    அதைத்தொடர்ந்து, ஒருநாள் தொடர் தொடங்கியது, முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டாண்டன் நகரில் நேற்று முன்தினம் தேதி நடைபெற்றது. 

    இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 222 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ராகுல் சஹார் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.

    தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் பிரித்வி ஷா அரைசதம் அடித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த நிலையில், 217 ரன்களில் 9-வது விக்கெட் இழந்து இந்தியா தடுமாறியது. 47-வது ஓவரின் இரண்டாவது பந்தில் கமலேஷ் நாகர்கோடி அடித்த பவுண்டரியின் மூலம் ஸ்கோர் சமனானது. 

    அதன்பின் இந்திய அணியை ரன் எடுக்கவிடாமல் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். கடைசி ஓவரில் ஐந்து பந்துகளுக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் கமலேஷ் பவுண்டரி ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 

    இதன்மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சாதனைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×