search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை எனது இரண்டாவது தாய்வீடு - மோகித் சர்மா உருக்கம்
    X

    சென்னை எனது இரண்டாவது தாய்வீடு - மோகித் சர்மா உருக்கம்

    சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை தூத்துக்குடி அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

    போட்டியின் துவக்க விழாவில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மோகித் சர்மா சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், ”சி.எஸ்.கே. அணி திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் 4 தொடர்களில் விளையாடி உள்ளேன். சென்னை அணிக்காக நான் செலவிட்ட ஒவ்வொரு கணமும் எனக்கு முக்கியமான அனுபவம் ஆகும்.

    தமிழகத்தின் நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள இளம் வீரர்கள் வெளியே தெரிவதற்கு டி.என்.பி.எல். மிகப்பெரிய வாய்ப்பு. டி.என்.பி.எல் தொடரின் புகழ் மெல்ல மெல்ல வளர்ந்து ஐ.பி.எல். போல் நிச்சயம் மாறும். டி.என்.பி.எல். தொடரில் பெற்ற புகழ் மூலம் ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் டி.நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது” என்றார்.

    Next Story
    ×