search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனில் கும்ப்ளேயின் பங்களிப்பு முற்றிலும் அப்பழுக்கற்றது: நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்
    X

    அனில் கும்ப்ளேயின் பங்களிப்பு முற்றிலும் அப்பழுக்கற்றது: நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்

    இந்திய அணிக்காக கடந்த ஒரு வருடம் அனில் கும்ப்ளேயின் பணி முற்றிலும் அப்பழுக்கற்றது என்று நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்னே, விராட் கோலி உடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

    கடந்த ஓராண்டாக இந்திய அணிக்காக அனில் கும்ப்ளே செய்த பணி முற்றிலும் அப்பழுக்கற்றது என்ற நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

    கும்ப்ளே - விராட் கோலி விவகாரம் குறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘இருவர் 24 மணி நேரமும் இணைந்து செயல்பட்டால், அவர்களுடைய கருத்துக்களில் வித்தியாசம் ஏற்படும். ஆகவே. அங்கே என்ன நடந்தது?. கும்ப்ளேயின் பதவிக்காலம் ஒரு வருடத்துடன் முடிவடைந்து விட்டது. அங்கே வேறுபாடு தோன்றியுள்ளது. அது அவர்களுக்கிடையிலான தொழில் விவகாரம் குறித்தது.



    கும்ப்ளே மிகவும் பக்குவம் வாய்ந்த வீரர். அவரது முடிவை பார்க்கையில், ஓகே. நியாயமானது ஒன்றுதான்.

    கேப்டன் - பயிற்சியாளர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த என்ன இருக்கிறது?. அனில் கும்ப்ளே அறிக்கையில் விவாதம் குறித்த எந்த நடவடிக்கைக்கும் இடமே இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்திய மீடியாக்கள் குறித்து ஒரு விஷயம் என்னவெனில், மீடியாக்கள் வீடு மற்றும் படுக்கையறைகளை குறித்து கவனம் செலுத்துவதில்லை. அதேபோல், விளையாட்டு வீரர்களின் ட்ரெஸிங் ரூமில் என்ன நடந்தது என்பது குறித்தும் கவலையடைய வேண்டாம்’’ என்றார்.
    Next Story
    ×