search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட்இண்டீசுடன் ஒரு நாள் போட்டி: தொடக்க வீரராக ரகானே களம் இறங்குவார் - வீராட்கோலி
    X

    வெஸ்ட்இண்டீசுடன் ஒரு நாள் போட்டி: தொடக்க வீரராக ரகானே களம் இறங்குவார் - வீராட்கோலி

    வெஸ்ட் இண்டீசுடன் இன்று நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரராக ரகானே களம் இறங்குவார் என இந்திய கேப்டன் வீராட் கோலி தெரிவித்துள்ளார்.
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    முதல் ஒரு நாள் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடிய தொடக்க வீரர் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இளம் வீரர் ரிஷாப் பாண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவானுடன் யார் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்ற கேள்வி இருக்கிறது. ரகானே அல்லது ரிஷாப் பாண்டு ஆகிய இருவரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் ரகானே தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று கேப்டன் வீராட்கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மாற்று தொடக்க வீரராக இருந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டியிலும் ஷிகர் தவானுடன் ரகானே தொடர்ந்து வீரராக களம் இறங்குவார்.

    அவர் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வர கூடியவர். ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடியதை பார்த்து இருக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த எதிர்நோக்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×