search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்
    X

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. தொடக்க நாளான நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.
    11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது.

    இதில் இந்தியா, நடப்பு செம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் ஜூலை 15-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதல் அரை இறுதி ஜூலை 18-ந் தேதி, 2-வது அரை இறுதி ஜூலை 20-ந் தேதியும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 23-ந் தேதி லண்டனில் நடக்கிறது.



    தொடக்க நாளான நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்தியா -இங்கிலாந்து, நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன.

    மிதாலிராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 29-ந் தேதி வெஸ்ட் இன்டீசுடனும், ஜூலை 2-ந் தேதி பாகிஸ்தானுடன், 5-ந் தேதி இலங்கையுடனும், 8-ந் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 12-ந் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 15-ந் தேதி நியுசிலாந்துடனும் மோதுகிறது.



    இந்திய மகளிர் அணி 2005-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த முறை இந்தியா சாதிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×