search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அலை ஓய்ந்து விட்டது - குஜராத்தில் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றும்: கர்நாடக முதல் மந்திரி பேட்டி
    X

    மோடி அலை ஓய்ந்து விட்டது - குஜராத்தில் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றும்: கர்நாடக முதல் மந்திரி பேட்டி

    நாட்டில் மோடி அலை ஓய்ந்து விட்டதாகவும் குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என்றும் கர்நாடக முதல் மந்திரி சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக முதல் மந்திரி சித்தராமைய்யா இன்று மைசூரு நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து மாநிலங்களையும் சமவிகிதத்தில் நடத்த வேண்டிய மத்திய அரசு கர்நாடக மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய உரிய நிதி பங்கீட்டை அளிப்பதில்லை. வரி வசூல் தொகையில் 42 சதவீதத்தை மட்டும்தான் மாநில அரசுகளுக்கு கொடுக்கிறது.

    வறட்சி நிவாரண நிதியாக மகாராஷ்டிராவுக்கு 8,500 கோடி ரூபாயும், குஜராத்துக்கு 4,000 கோடி ரூபாயும் அளித்துள்ள மத்திய அரசு, அவ்விரு மாநிலங்களைவிட வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகத்துக்கு வெறும் 1,550 கோடி ரூபாய் மட்டுமே வறட்சி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் மோடி அலை படிப்படியாக ஓய்ந்து வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×