search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை கடத்தலை தடுக்க தத்தெடுப்பு சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு
    X

    குழந்தை கடத்தலை தடுக்க தத்தெடுப்பு சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு

    குழந்தை கடத்தலை தடுக்க தத்தெடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, வரைவு கேபினட் அறிக்கை ஒன்றை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய சிறார் நீதி சட்டம் 2015 மற்றும் இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்பு சட்டம் போன்றவற்றின் கீழ் குழந்தை தத்தெடுப்புக்கு அரசியல்சாசனம் வழிவகை செய்துள்ளது. இதில் குழந்தையின் ஆதாரம் மற்றும் தத்தெடுக்கும் தம்பதியரின் பின்புலங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான வழிமுறைகள் சிறார் நீதிச்சட்டத்தில் உள்ளன.

    ஆனால் இந்து தத்தெடுப்பு சட்டத்தில் இந்த வழிமுறைகள் இல்லாமல் இருப்பதுடன், இதில் உள்ள பல்வேறு ஓட்டைகள் மூலம் குழந்தை கடத்தல் போன்ற பல்வேறு தவறுகளுக்கும் காரணமாகி விடுகிறது.

    எனவே இத்தகைய குறைகளை தடுக்க இந்து தத்தெடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு கடுமையாக்கும் வகையில் வரைவு கேபினட் அறிக்கை ஒன்றை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த அறிக்கையை மத்திய மந்திரிசபையில் வைப்பதற்கு முன் உள்துறை, சட்டம் மற்றும் நிதியமைச்சகங்களுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த திருத்தத்தின்படி, குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோர் அது குறித்து நாட்டின் உயரிய தத்தெடுப்பு அமைப்பான ‘குழந்தை தத்தெடுப்பு ஆதார ஆணையத்தில்’ பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. இனிமேல் குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோர் அதற்கான சான்றிதழை பெற்றவுடன், மேற்படி ஆணைய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
    Next Story
    ×