search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது இடத்தில் சிறுநீர் கழித்த அமைச்சர்: வைரலாக பரவும் புகைப்படம்
    X

    பொது இடத்தில் சிறுநீர் கழித்த அமைச்சர்: வைரலாக பரவும் புகைப்படம்

    மராட்டிய மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் - பார்ஷி சாலையில் சிறுநீர் கழிக்கும் அமைச்சரின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் - பார்ஷி சாலையில் சிறுநீர் கழிக்கும் அமைச்சரின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மராட்டிய மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ராம் ஷிண்டே. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்
    சோலாப்பூர் - பார்ஷி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென காரை நிறுத்திய அவர், சாலையோரம் சிறுநீர் கழித்தார். அந்த வழியாக சென்ற சிலர், இதை புகைப்படமாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    இதுதொடர்பாக விளக்கம் அளித்த மந்திரி ராம் ஷிண்டே, கடந்த சில தினங்களாக கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக அலைந்து திரிந்து வருகிறேன். அதனால் எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் சென்ற வழியில் கழிப்பிடங்கள் ஏதும் இல்லை என்பதால் வேறுவழியின்றி சாலையில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக மந்திரியின் இந்த செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டம் பெரிய வெற்றி என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் அத்திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர்.
    Next Story
    ×