search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உரங்களை தடை செய்யக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    உரங்களை தடை செய்யக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    தீங்கு விளைவிக்கும் உரங்களை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    வேளாண் ஆர்வலர் உள்ளிட்ட 3 மனுதாரர்கள் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மனிதனுக்கு பலவகையிலும் தீங்கு விளைவிக்கக்கூடிய அனைத்து உரங்களையும் தடை செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளிக்க வேண்டும். உரங்கள் குறித்த விளம்பரம் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    மேலும், பிற நாடுகளில்  தடை செய்யப்பட்ட 93 உரங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாகவும், இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு வல்லுநர் குழுவை அமைக்க உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை, வேளாண்துறை அமைச்சகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
    Next Story
    ×