search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுவிட்டரில் டிரெண்டிங் ஆன குழந்தைகள் தினம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தலைவர்கள் வாழ்த்து
    X

    டுவிட்டரில் டிரெண்டிங் ஆன குழந்தைகள் தினம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தலைவர்கள் வாழ்த்து

    குழந்தைகள் தினத்தையொட்டி ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் குழந்தைகள் தினம் டிரெண்டிங்கில் உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகளால் ‘நேரு மாமா’ என்று அன்புடன் அழைக்கப்படும் தலைவருமான ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று நேருவின் 128-வது பிறந்தநாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.



    டுவிட்டரில் ‘குழந்தைகள் தினம்’ என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதலே இந்தியா மட்டுமின்றி உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. தலைவர்கள் டுவிட்டர் மூலம் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராகுல் காந்தி அலுவலகம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக டுவிட் செய்திருந்தனர். மேலும், நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×