search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் காற்று மாசுபடுதலை குறைக்க பார்கிங் கட்டணத்தை அதிகரிக்க பரிந்துரை
    X

    டெல்லியில் காற்று மாசுபடுதலை குறைக்க பார்கிங் கட்டணத்தை அதிகரிக்க பரிந்துரை

    டெல்லியில் காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் கார் பார்க்கிங் கட்டணங்களை 4 மடங்கு உயர்த்த சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஆணையம் முடிவெடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் முன் எப்போதும் இல்லாத வகையில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை குறைக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சுற்றுசூழல் மாசு தடுப்பு மற்றூம் கட்டுப்பாடு ஆணையம் (EPCA), இன்று கூடியது.

    இதில், தனியார் வாகன பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தனிநபர் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை 4 மடங்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் படி விரைவில் டெல்லியில் வாகனங்களின் பார்கிங் கட்டணம் கடுமையாக உயரும் என தெரிகிறது.  

    அதேபோல், மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத பிற நேரங்களில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பது, வாகன கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, உள்ளிட்ட பரிந்துரைகளையும் மேற்கண்ட குழு பரிந்துரைத்துள்ளது. 
    Next Story
    ×