search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இந்தியா வந்தார்
    X

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இந்தியா வந்தார்

    டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பிரதிநிதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இன்று இந்தியா வந்தடைந்தார்.
    புதுடெல்லி:

    டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பிரதிநிதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இன்று இந்தியா வந்தடைந்தார்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் எதிர்பாராத திடீர் விஜயமாக நேற்று ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அப்போது பேசிய அவர் பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பான பார்வையை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    அங்குள்ள தலிபான்கள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைத்துவரும் ஆதரவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்க அரசு வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி காஜா முஹம்மது ஆசிப் அழைப்பை ஏற்று இந்தியா வருவதற்கு முன்னதாக இன்று மாலை இஸ்லாமாபாத் நகருக்கு சென்றார். அந்நாட்டின் பிரதமர் ஷாஹித் காக்கான் அப்பாசியை சந்தித்து பேசிய பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்டார்.



    இந்நிலையில், இரவு டெல்லி வந்தடைந்த அவரை அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
    Next Story
    ×