search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் மேலிடம் விரும்பினால் தெலுங்கானாவில் போட்டியிடுவேன்: அசாருதீன் அறிவிப்பு
    X

    காங்கிரஸ் மேலிடம் விரும்பினால் தெலுங்கானாவில் போட்டியிடுவேன்: அசாருதீன் அறிவிப்பு

    காங்கிரஸ் மேலிடம் விரும்பினால் தெலுங்கானாவில் போட்டியிடுவேன் என்று முகமது அசாருதீன் கூறியுள்ளார்.

    ஐதராபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்.

    கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அசாருதீன் ராஜஸ்தான் மாநிலம் டோங்- சவாரி மாதோபூர் தொகுதியில் போட்டியிட்டு பாரதிய ஜனதா வேட்பாளரிடம் தோற்றார்.

    இதற்கிடையே 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டசபை தேர்தலில் அசாருதின் தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வருமாறு அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் உத்தம்குமார் ரெட்டி கடந்த வாரம் அழைப்பு விடுத்தார்.

    இதற்கு அசாருதீன் தற்போது பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் மேலிடம் விரும்பினால் தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிடுவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அசாருதீன் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலம் தேர்தலில் போட்டியிட அழைத்ததன் மூலம் உத்தம்குமார் ரெட்டி என்னை கவுரவப்படுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் என்ன விரும்புகிறதோ அதன் அடிப்படையில் முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அசாருதீன் இதற்கு முன்பு உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலும் அவரது சொந்த ஊர் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×