search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த நாட்டுடனும் தொடர்புகொள்ள முடிகிறது: மோடி பெருமிதம்
    X

    மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த நாட்டுடனும் தொடர்புகொள்ள முடிகிறது: மோடி பெருமிதம்

    வானொலி மூலம் உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களுடன் தொடர்புகொள்ள முடிகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார்.

    அவ்வகையில், 36-வது முறையாக இன்றைய ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உதவுவதாக குறிப்பிட்டார்.

    இந்த வானொலி நிகழ்ச்சி எனது கருத்து மற்றும் கண்ணோட்டத்தில் மட்டும் அமைந்தது அல்ல, நாட்டை வடிவமைப்பதில் மக்களின் கருத்துகளையும் கண்ணோட்டத்தையும் தெரிவிப்பதற்கு இந்நிகழ்ச்சி உதவியுள்ளது. அரசியல் கலவை இல்லாமல் இந்நிகழ்ச்சியை கொண்டுசெல்ல நான் முயன்று வந்துள்ளேன்.

    அரசின் ஆட்சிமுறை பற்றி நாட்டு மக்களும் கருத்து தெரிவிக்கும் தளமாக, ஒட்டுமொத்தமாக நாட்டு மக்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ளவும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி உதவி செய்துள்ளது.

    அரியானா மாநிலத்தில் கிராமத் தலைவர் ஒருவர் ‘செல்பி வித் டாட்டர்’ என்று மகளுடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அந்த சிறிய தீப்பொறி, நாடு முழுவதும் உள்ள பெற்றோர் தங்களது மகள்களுடன் செல்பி எடுத்து பெருமைப்படும் வகையில் அமைந்ததுபோல், நாட்டை கட்டமைப்பதில் மக்களும் பங்குகொள்ள விரும்புகிறார்கள் என்பதை இந்த வானொலி நிகழ்ச்சியின் மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×