search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணமதிப்பிழப்பு அறிவிப்பால் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது: மன்மோகன்சிங் பேச்சு
    X

    பணமதிப்பிழப்பு அறிவிப்பால் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது: மன்மோகன்சிங் பேச்சு

    பாரதிய ஜனதா கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை தேவையற்றதாகிவிட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
    மொகாலி:

    முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங் சண்டிகார் மொகாலியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜனதா கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை சாகச திட்டம் என்று சொன்னார்கள். ஆனால் இந்த சாகசம் தேவையற்றதாகிவிட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது. இதானால் ஏற்படும் வீழ்ச்சியை நாம் எல்லோரும் பார்க்கிறோம்.

    நாட்டில் பணபுழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் 86 சதவீதம் அளவுக்கு திரும்ப பெறப்பட்டது. பணமதிப்பு நீக்கத்தால் எல்லாம் நடந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. அது தொழில்நுட்ப ரீதியாக நடைபெறவில்லை. பொருளாதார தேவைக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பொருளாதாரம் மெதுவாக சரிய ஆரம்பித்து விட்டது.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடையே ஜி.எஸ்.டி.யும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. நீண்டகால திட்டமாக நாங்கள் உருவாக்கி இருந்தோம். ஆனால் அது குறுகிய கால திட்டமாகிவிட்டது. அதில் குறைபாடுகள் உள்ளது. அது சரிசெய்யப்பட வேண்டும். எனவேதான் பொருளாதாரம் பின்தங்கிய பாதையில் செல்கிறது.


    உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

    எங்கள் ஆட்சியின் போது நாட்டின் பொருளாதார முதலீடு அளவு 35 முதல் 37 சதவீதமாக இருந்தது. இப்போது 30 சதவீதமாக குறைந்துவிட்டது. குறிப்பாக தனியார் முதலீடு வளர்ச்சி அடையவில்லை.
     
    இப்போது இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு அவசியம். பொதுத்துறையில் பிரத்யேகமான முதலீடு இருந்தால் தான் வளர்ச்சியை உணர முடியும். இதேபோல் அன்னிய செலாவணி நிலைமையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    சர்வதேச மயமாக்களில் சீனா இன்று சேம்பியனாக திகழ்கிறது. அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தேர்தல் பிரசாரத்துக்கு பின்பு பொதுமக்களின் கருத்து மேம்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் பலநாடுகளின் கூட்டு வணிகத்தை அங்கீகரித்துள்ளன.

    இவ்வாறு மன் மோகன்சிங் பேசினார்.
    Next Story
    ×